News September 7, 2025

அண்ணாநகர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

Similar News

News September 9, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எஸ்பி

image

கடலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் காவல்துறை பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒவிய போட்டிகளை வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மனிஷா,சார்லஸ், அப்பாண்டைராஜ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

News September 9, 2025

கடலூர்: பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் டி.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் Bumble B அறக்கட்டளை மூலம் கல்வி 40 செயலியை தொடங்கி வைத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவியினை இன்று (8.09.2025) வழங்கினார்.

error: Content is protected !!