News September 7, 2025
சந்திர கிரகணத்தில் உணவு சாப்பிடக்கூடாதா? விளக்கம்

✰இந்து தர்மத்தின்படி, கிரகணங்களின் போது சூரியன், சந்திரனில் இருந்து வெளியாகும் எதிர்மறை ஆற்றல், கோயில் சிலைகளின் சக்தியை குறைக்கும் என்பதால், கோயில் கதவுகள் மூடப்படுகின்றன.
✰கிரகணத்தின் போது, சமைக்கும் உணவு விஷமாக மாறும் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அவற்றில் உண்மையில்லை.
✰கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது, வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற தவறான கருத்தும் நிலவி வருகிறது. SHARE IT.
Similar News
News September 9, 2025
தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
News September 9, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன. *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை.
News September 9, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த பிரபலம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துவேல் பாண்டியனின் ப்ரீக்வெல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சிவராஜ் குமார் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை இந்த வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள நெல்சன், படத்தில் இன்னும் பல பிரபலங்களை நடிக்க வைத்துள்ளாராம். இப்படத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேமியோ யார்?