News September 7, 2025
அட்வான்ஸ் புக்கிங்: 20 சவக்குழிகள் தோண்டப்பட்ட சம்பவம்!

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான அடக்கவிடத்தில், ஒரே நாளில் 20 குழிகள் தோண்டப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், “செடி, கொடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் வந்தது. அவர்கள் விரைவாக வேலையை முடித்ததால், வாடகை வீணாக போகிறதே என்று குழிகளை தோண்டினோம்,” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழிகள் மூடப்பட்டது.
Similar News
News September 9, 2025
கோவை: சர்க்கரை நோயால் நேர்ந்த விபரீதம்!

கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் ருக்மணி (66). இவர் நீரழிவுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 8, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
கோவையில் இலவச Tally பயிற்சி! APPLY NOW

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <