News September 7, 2025
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி வழிபாடு

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வண்ண பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டுச் சென்றனர்.
Similar News
News November 15, 2025
தேனி: காசநோய் பாதிப்பால் ஒருவர் தற்கொலை

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பங்காரு (49). இவருக்கு காச நோய் ஏற்பட்ட நிலையில் அதற்காக 6மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்தபோதிலும் அவர் மது குடித்து வந்துள்ளார். அதனால் அவருக்கு கடந்த ஒரு மாத காலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியின் வேதனையினால் பங்காரு நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 14, 2025
தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 14, 2025
தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.


