News September 7, 2025
திருச்சி: சந்திர கிரகணத்தை பார்க்கலாம் வாங்க

இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) இரவு நடைபெற உள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணத்தை காண திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி அறிவியல் பூங்காவில் இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இந்த அறிவியல் பூங்காவிற்கு வந்து சந்திர கிரகணத்தை கண்டு வியக்க
மாநகராட்சி அழைப்பு விடுப்புகப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News September 8, 2025
திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 8, 2025
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மக்களே இதற்கு விண்ணபிக்க <