News September 7, 2025

கருப்பணசாமி கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ தரிசனம்!

image

கரூர், மண்மங்கலம் வட்டம், பெரிய வடுகபட்டியில் உள்ள அருள்மிகு கருப்பணசாமி கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். இதில் கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழா முடிந்ததும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News

News September 8, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் வாராவாரம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை உடனடியாக தீர்வு காண மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

News September 8, 2025

ஸ்டாலினை வரவேற்ற செந்தில் பாலாஜி!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சென்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில், அவரை கரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ நேரில் சென்று வரவேற்றார். அவருடன் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

News September 8, 2025

அய்யர்மலையில் நாளை முதல் ரோப்கார் இயக்கம்

image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பழுதடைந்திருந்த ரோப்கார் வசதி சரிசெய்யப்பட்டு, நாளை முதல் மீண்டும் செயல்படும் என செயல் அலுவலர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். 1017 படிகள் உள்ளதால், இது பக்தர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

error: Content is protected !!