News September 7, 2025

தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <>இங்கு கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637703>>தொடர்ச்சி<<>>.

Similar News

News September 8, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சுற்றுலா விருதுகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். மொத்தம் 15 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளுக்கு <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15, 2025 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஷேர்

News September 8, 2025

தி.மலை: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

தி.மலை வழக்கறிஞர் சங்கங்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

image

வழக்கறிஞர் சேம நலநிதியை உயர்த்தக்கோரியும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வழக்கறிஞர் போராட்ட உரிமைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளை ஏற்று திருவண்ணாமலை வழக்கறிஞர் சங்கங்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!