News September 7, 2025

தருமபுரி: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04342-230000). ஷேர் பண்ணுங்க

Similar News

News September 8, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.08) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக குணவர்மன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (08.09.2025) பெற்றுகொண்டார். உடன் மாவட்ட வன அலுவலர் இராஜங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 8, 2025

முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்

image

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி. வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!