News September 7, 2025
ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
Similar News
News September 8, 2025
GALLERY: சிலிர்ப்பூட்டும் சந்திர கிரகணத்தின் அழகியல்!

நேற்று நிகழ்ந்த சந்திர கிரகணம் மக்களை சிலிர்ப்பில் ஆழ்த்தியது. சுமார் 82 நிமிடங்கள் நீடித்த இந்த கிரகணத்தின் போது, நிலவு மொத்தமாக ரத்த கலரில் மாறியதை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். புகழ்பெற்ற கட்டடங்களின் பின்னணியில் தெரிந்த ‘ஃபிளட் மூன்’ போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. அவற்றை பார்க்க, மேலே உள்ள படங்களை Swipe செய்யவும். நீங்க இந்த ஃபிளட் மூனை பார்த்தீங்களா?
News September 8, 2025
கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்ஷன்

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 8, 2025
கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?