News September 7, 2025
திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதி செய்தார்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என பிரேமலதா அதிரடியாக கூறியுள்ளார். கீழ்பெண்ணாத்தூர் பரப்புரையில் பேசிய அவர், ஒரு பெண்ணாக மக்கள் படும் இன்னல்களை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம், DMDK, DMK அணியுடன் செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ADMK, TVK இவை 2-ல் எந்த பக்கம் செல்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.
Similar News
News September 8, 2025
கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்ஷன்

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 8, 2025
கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 8, 2025
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.