News September 7, 2025
டிப்பர் லாரி மோதி சிறுமி பலி

பூந்தமல்லி போரூரை கணேஷ் என்பவரின் மகள் யோகஸ்ரீ (வயது 10) தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் போரூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சாலையில் தடுமாறி விழுந்தனர். இதில் யோகஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு சிறுமி மற்றும் உறவுக்கார பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 8, 2025
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

திருவள்ளூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <
News September 8, 2025
திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)
News September 8, 2025
நந்தியம்பாக்கம்: மின் கம்பியை மிதித்து 4 எருமை மாடுகள் பலி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நளினி மற்றும் பலராமன் தம்பதியரின் நான்கு எருமை மாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இன்று காலை, நந்தியம்பாக்கம் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இந்தச் சோகம் நேர்ந்துள்ளது. பால் வியாபாரத்தை நம்பி இருந்த இந்தத் தம்பதியருக்கு, மாடுகளின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.