News September 7, 2025
சிவகங்கையில் இனி Whatsapp மூலம் தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
Similar News
News September 8, 2025
காரைக்குடி வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

காரைக்குடி வழியாக ( வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு )எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் ( 06061 ) வரும் 10 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்தும் , வண்டி எண் ( 06062 ) 11 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தும் புறப்படும் இந்த இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் காரைக்குடி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News September 8, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

சிவகங்கை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<
News September 8, 2025
BREAKING: சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள்/ கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.