News September 7, 2025
பெரம்பலூர் இளைஞர்களே இந்த வாய்ப்பை Miss பண்ணாதீங்க!

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்களுக்குநிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 04.00மணி வரை விண்ணப்ப படிவங்களை பெறலாம். கல்வி தகுதி 10 ஆம் தேர்ச்சி. வயது வரம்பு 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9894476223, 7092534474 , நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 8, 2025
தவெக தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் செப்.,13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் சிவகுமார் பெரம்பலூர் தொகுதி மற்றும் குன்னம் தொகுதிக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News September 8, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய 04328 276317 என்ற எண்ணில் அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE NOW.
News September 8, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 287 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.