News September 7, 2025
காஞ்சிபுரம் கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு துவங்கி அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் ஏகாம்பரநாதர் கோயிலில் மாலை 6 மணிக்கும், குமரகோட்டம் கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கும், உலகளந்த பெருமாள் கோயிலில் மதியம் 1 மணிக்கும், கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6.30க்கும் நடைசாற்றப்படுகிறது. (SHARE)
Similar News
News September 8, 2025
உத்திரமேரூர்: ஏரி சீரமைப்பிற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம், உத்திரமேரூர் இடையே செய்யாற்றின் குறுக்கே, மாகரல் பகுதியில் 2019-ல் ₹8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் மதகுகள் கடந்த ஆண்டு பருவமழையில் சேதமடைந்தன. இதனால், காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயும் பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க தற்போது ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 8, 2025
காஞ்சிபுரம்: எமனான மாடு; இருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே படப்பை மேம்பாலத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற நவீன் (24) மற்றும் அபிராமி (22) ஆகியோர் மீது, திடீரென குறுக்கே வந்த மாடு மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 8, 2025
காஞ்சிபுரம்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

காஞ்சிபுரம் மக்களே, இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க