News September 7, 2025
புதுகை: அவசரக்கால உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசரக்கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04322-222207 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News September 8, 2025
புதுக்கோட்டை: கட்டணமில்லா வக்கீல் வேண்டுமா?

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ புதுகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04322-220585
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️ இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
புதுகை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

புதுகை மாவட்டத்தில் நாளை (செப்.,9) 8 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, புதுகை 28, 32-வது வார்டு மக்கள் மன்றத்திலும், திருவரங்குளம் 11 ஊராட்சிக்கு கீழாத்தூர் சமுதாய கூடம், அன்னவாசல் 7 ஊராட்சிக்கு கீழக்குறிச்சி சமுதாய கூடம், விராலிமலை 15 ஊராட்சிக்கு குமாரமங்கலம் கலையரங்கம், கறம்பக்குடி 6 ஊராட்சி முத்துலட்சுமி திருமண மண்டபம், திருமயம் ஊராட்சியில் நடைபெற உள்ளது. SHARE IT.