News September 7, 2025
ஞானத்தை அள்ளித் தரும் விநாயகர் காயத்ரி மந்திரம்!

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயா
பொருள்
வளைந்த யானைத் தும்பிக்கையைக் கொண்டவரே நான் பணிவுடன் உயர்ந்த புத்தியை நாடுகிறேன். என் வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்ய மகிமை மிக்கவரை வணங்குகிறேன். எங்கும் நிறைந்த, ஒற்றைத் தந்தத்தையுடைய தெய்வீகப் பெருமானை நான் வணங்குகிறேன். SHARE IT.
Similar News
News September 7, 2025
ஸ்பெயின் வீரரை எளிதாக காலி செய்த குகேஷ்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் FIDE Grand Swiss செஸ் தொடரின் 3-ம் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றார். கருப்பு நிறக்காயுடன் களமிறங்கிய குகேஷ், ஸ்பெயின் டேனில் யுஃபாவை எளிதாக வீழ்த்தினார். .மறுபுறம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, ஆஸ்திரிய வீராங்கனை ஆல்கா படெல்காவை 3-வது சுற்றில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றார்.
News September 7, 2025
மனிதனின் கண்ணில் பல் வளர்ந்த அபூர்வம்

கண்ணில் பல் வளருமா? ஆச்சரியமா இருக்குல்ல. பாட்னாவில் 42 வயது நபருக்கு அப்படி நடந்துள்ளது. அவரது கண்ணின் கீழ் பகுதியில் கட்டி போன்ற புண் முதலில் உருவாகியுள்ளது. ஹாஸ்பிடலில் பரிசோதித்தபோது, கண்ணின் கீழ் பகுதியில் அவருக்கு பல் வேர்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அதனை நீக்கியுள்ளனர். பல் உருவாக்கும் தன்மை திசை மாற்றம் அடைந்தால் இப்படி நடக்குமாம்..
News September 7, 2025
குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு CM பாராட்டு

திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில் இசை வடிவில் லிடியன் நாதஸ்வரமும், அமிர்தவர்ஷினியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த அற்புதமான படைப்பை CM ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இருவரையும் வாழ்த்துவதாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை நீங்கள் Spotify-ல் கேட்கலாம்…