News September 7, 2025
அம்பத்துாரில் திடீர் பள்ளம்

அம்பத்துார் தொழிற்பேட்டை சாலையில் நேற்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யபட்டது. சிட்கோ நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். சாலை 10 அடி அகலத்திற்கு பலவீனமாக இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து சாலையை தோண்டி, பள்ளத்தில் மணல் கலவையை கொட்டி, சாலையை சீரமைத்தனர். அதன்பின், அங்கு போக்குவரத்து சீரானது. 2 வாரங்களில், 2 முறை மண் அரிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 9, 2025
சென்னையினுள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (09.09.2025)
திருவொற்றியூர், மணலி, மாதவரம், இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களின் 11 வார்டுகளில் முகாம் நடைபெறும்.முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.
News September 8, 2025
சென்னை: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News September 8, 2025
JUST IN: சென்னையில் வலுக்கட்டாயமாக கைது

தூய்மை பணியாளர்களின் ஒப்பந்தத்தை தனியார் மையம் படுத்தக்கூடாது என கடந்த ஒரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், கொருக்குபேட்டை, அயனாவரம் பகுதியில் தூய்மை பணியாளர்களின் வீடுகளிலே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.