News September 7, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே கேம் சேஞ்சர் இவர்தான்

இந்திய அணியில் விராட், ரோஹித் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று இங்கி., முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் இல்லாதபோது, கில் தலைமையிலான இளம்படை இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததையும் அவர் பாராட்டினார். அதேநேரம், தற்போதைய இந்திய அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றும் அவர் புகழாராம் சூட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 7, 2025
மனிதனின் கண்ணில் பல் வளர்ந்த அபூர்வம்

கண்ணில் பல் வளருமா? ஆச்சரியமா இருக்குல்ல. பாட்னாவில் 42 வயது நபருக்கு அப்படி நடந்துள்ளது. அவரது கண்ணின் கீழ் பகுதியில் கட்டி போன்ற புண் முதலில் உருவாகியுள்ளது. ஹாஸ்பிடலில் பரிசோதித்தபோது, கண்ணின் கீழ் பகுதியில் அவருக்கு பல் வேர்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அதனை நீக்கியுள்ளனர். பல் உருவாக்கும் தன்மை திசை மாற்றம் அடைந்தால் இப்படி நடக்குமாம்..
News September 7, 2025
குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு CM பாராட்டு

திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில் இசை வடிவில் லிடியன் நாதஸ்வரமும், அமிர்தவர்ஷினியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த அற்புதமான படைப்பை CM ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இருவரையும் வாழ்த்துவதாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை நீங்கள் Spotify-ல் கேட்கலாம்…
News September 7, 2025
ராகுலை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ED சம்மன்

ராகுல் காந்தி UK குடியுரிமை பெற்றிருப்பதாக, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான ஆவணங்களை வரும் 9-ம் தேதி நேரில் வந்து வழங்குமாறு விக்னேஷுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ராகுல் இந்திய தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என விக்னேஷ் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.