News September 7, 2025
புதுச்சேரி மாணவர்களுக்கு முக்கிய Update!

புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்புகளில் (எம்.டெக், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி.,) சேர்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்த நிலையில், மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் 9ஆம் தேதி இறுதி கட்டமாக மாப்-அப் கலந்தாய்வு நடக்கிறது. விபரங்களுக்கு www.pgacpdy.in என்ற இனையத்தில் பாராக்கவும். SHARE IT
Similar News
News September 8, 2025
புதுச்சேரி: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் தலைவர்

புதுச்சேரி முன்னாள் பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
புதுச்சேரி: கிராம வங்கியில் ரூ.35.000 சம்பளத்தில் வேலை!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <
News September 8, 2025
புதுச்சேரி மக்களே உஷார்

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியபடுத்துங்கள்.