News April 10, 2024
பெண்களுக்கு மோர் வழங்கிய ஆட்சியர்

செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராம பணிப்பெண்களிடம் 100 % வாக்களிப்பது குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பணிப்பெண்களுக்கு மோர் வழங்கினார். இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தீபசித்ரா , வட்டாட்சியர்கள் முருகன், ரேணுகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News August 20, 2025
தி.மலை கோயிலின் அரிய பெருமை தெரியுமா?

திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயர் உண்டு. நவம்- ஒன்பது, துவாரம் – வாயில்கள், பதி – அரசன். ராஜ கோபுரம், பேய் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம் என இங்குள்ள 9 வாயில்களுக்கு அரசனாக சிவன் இருப்பதால் நவதுவாரபதி என அழைக்கப்படுகிறது. நம்ம திருவண்ணாமலை பெருமையை ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா

கலசபாக்கம் அடுத்த தென்பெள்ளிபட்டு ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், நேற்று வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.சிவகுமார், வழங்கினார். உடன் நகர செயலாளர் சௌந்தர்ராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலாஜி இருந்தனர்.
News August 20, 2025
நாடாளுமன்றத்தில் தி.மலை எம்.பி அண்ணாதுரை கேள்வி

2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் மாதிரி தொழில் மையங்களால் (MCCS) ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கை விவரங்கள், இந்த நிகழ்வுகள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்ற பயனாளர்களின் எண்ணிக்கை விவரங்கள், இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் விளிம்புநிலை மக்களை பங்கேற்க செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் தி.மலை எம்.பி அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.