News September 7, 2025
TET தேர்ச்சி கட்டாயம்: ஆக்ஷனில் பள்ளிக்கல்வித்துறை

பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று SC தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
Similar News
News September 8, 2025
மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க வேண்டுமா? நயினார்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின் சொன்னதை செய்தாரா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழை மக்களை ஏமாற்றி, அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துதான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா எனவும் விமர்சித்துள்ளார். மக்கள் விரோத திமுகவுக்கு எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.
News September 8, 2025
BREAKING: செங்கோட்டையன் இன்று டெல்லி பயணம்

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட Ex அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை டெல்லி செல்கிறார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்திருந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி செல்லவுள்ளது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 8, 2025
Health Tips: ஆறாத அல்சர் எரிச்சல்; சூப்பர் வைத்தியம்

எந்த வைத்தியம் பார்த்தாலும் அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்னை சரியாகவில்லையா? இதனை சரி செய்ய எளிமையான வழி இருக்கிறது. 2 வெண்டைக்காயை உப்பு தண்ணீரில் கழுவி, அதை வெட்டி இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் 100ml அளவு அதை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர அல்சர் பிரச்னைகள் நீங்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.