News September 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

Similar News

News September 8, 2025

ஒளியிலே தெரிவது தேவதையா..

image

ஜில்லாவின் தங்கையாய், சுயம்பு லிங்கத்தின் மகளாய் வசீகரித்த நிவேதா தாமஸின் போட்டோஸ் படுவைரலாகி வருகிறது. கடைசியாக தமிழில் ரஜினியின் மகளாக ‘தர்பார்’ படத்தில் நடித்தவரை அடுத்து எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். அவரின் போட்டோஸை பார்த்த ரசிகர்கள், ‘அவள் ஓணம் சேலையில் அலங்கரித்த வேளை.. அவளின் அழகில் மயங்கி நேரமும் மறந்தது நாளை!’ என கவிதை பாடி வருகின்றனர்.

News September 8, 2025

சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தை போன்று வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹140-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹4 ஆயிரம் அதிகரித்துள்ளது.

News September 8, 2025

முடங்கியது TET சர்வர்.. ஆசிரியர்கள் தவிப்பு

image

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயமாகியுள்ளது. தேர்வு எழுதுவோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்த நிலையில், trb.tn.gov.in இணையதள சர்வர் முடங்கியுள்ளது. இதனால், பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நவம்பரில் TET தேர்வு நடைபெறவுள்ளது.

error: Content is protected !!