News September 7, 2025
ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
Similar News
News September 8, 2025
திருவள்ளூர்: காயலான் கடையாக மாறிய ஆர்.டி.ஓ., அலுவலகம்

திருவள்ளூர்: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பறிமுதல் வாகனங்களை போலீசார் குவித்து வைத்துள்ளதால், காயலான் கடை போல் மாறியுள்ளது. நன்றாக உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காயலான் கடை போல் உள்ளது. இதனை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
News September 8, 2025
திருவள்ளுர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
News September 8, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!