News September 7, 2025

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

image

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 – 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு காலை 5 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் மெட்ரே ரயில்கள் இயக்கப்படும். காலை 6.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எந்த மாற்றமும் இன்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

FLASH: ஸ்தம்பித்த சென்னை

image

மீலாது நபி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபர்கள் என மக்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் படையெடுத்துச் சென்றனர். இந்நிலையில் தற்போது விடுமுறை முடிந்ததால், நேற்று முதல் சென்னையை நோங்கி வர ஆரம்பித்துள்ளனர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

News September 8, 2025

தி.நகர்: பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு, தினமும் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து, கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்வர். இந்நிலையில், கமலாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, டிஜிபி., அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அது புரளி என உறுதி செய்யப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News September 8, 2025

சென்னையில் இன்று ( 7/09/2025) இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று ( 7/09/2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!