News September 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

Similar News

News September 8, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும் மாதம் 80,000 சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டை:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்யலாம்.ஷேர்

News September 8, 2025

ராணிப்பேட்டை: RATION CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 8, 2025

ராணிப்பேட்டை: திருட்டு வழக்கில் ஒருவர் கைது

image

கைனூரில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று செப்-7ஆம் தேதி ராமதாஸ் நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரக்கோணம் அகன் நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைனூர் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியது தெரிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!