News September 6, 2025

0% வரிவிதித்த டிரம்ப்.. எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?

image

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, டிரம்ப் 0% வரிவிதித்துள்ளார். ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், கிராஃபைட், டங்ஸ்டன், யுரேனியம் உள்ளிட்ட 45 வகையான பொருள்களுக்கு 0% வரிவிதித்துள்ளார். இந்தியாவிற்கு 50% வரிவிதித்துள்ள நிலையில், பல நாடுகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

image

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு செல்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 12, 2026

ராமதாஸ் வழக்கிற்கு இடைக்கால தடை

image

கட்சி(பாமக) உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து HC-ல் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2026

Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

image

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்‌ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்‌ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.

error: Content is protected !!