News September 6, 2025

தீபாவளி: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தீபாவளிப் பண்டிகைக்கு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் வழியாகச் செல்லும் செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News September 8, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

விழுப்புரம் மக்களே.. இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க

News September 7, 2025

தைலாபுரம்: பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், இன்று (செப். 7) சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள், கௌரவத் தலைவர் மணி மற்றும் ஊடகப் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

error: Content is protected !!