News September 6, 2025

திருவண்ணாமலை கிரிவலம்: பாதுகாப்பு பணிக்கு 200 போலீசார்

image

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

வேலூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

வேலூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

வேலூர்: இருசக்கர வாகன விபத்து

image

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மினி டாடா ஏஸ் மீது, இன்று (செப்.8) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 8, 2025

வேலூர்: WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!