News September 6, 2025

முதலிடம் நோக்கி தமிழ்நாடு – எம்.எல்.ஏ இனிகோ

image

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதலிடம் நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 2 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வுகளுக்கான, கட்டணமில்லா மாதிரித்தேர்வு இன்று (செப்.,8) காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை முடிய மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு வினாத் தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

திருச்சி: வாழவந்தி அரவண்காடு அருகே பெண் பலி

image

முசிறி அருகே சிந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (45) இவர் இன்று காலையில் தனது மொபட்டில் முசிறி துறையூர சாலையில் வாளவந்தி அரவங்காடு அருகே வந்தபோது எந்தவித செய்கையும் காட்டாமல் திரும்பி உள்ளார். அப்போது குளித்தலை உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார் (24) ஓட்டி வந்த கார் மொபட் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

News September 8, 2025

திருச்சியில் சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய்

image

தவெக தலை​வர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்​சி​யில் தேர்​தல் பிரச்சாரத்தை தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் அவர் அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் குன்னம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக ​வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!