News September 6, 2025
மகளிருக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூக பணி மையம் இணைந்து பெண்களுக்கான இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு, அன்னை தெரசா தையல் பள்ளி, ரோசரி பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம், தொடர்புக்கு: 99761 – 80670, 77388 – 50094 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
Similar News
News September 8, 2025
கோவையில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

கோவை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News September 8, 2025
கோவையில் இதை செய்தால் கரண்ட் பில்லே வராது!

கோவை மக்களே ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம். பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டத்தில் ரூ.78000 வரை பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கும். pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.மேலும் கோவை ஆவாரம்பாளையத்தில் இதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.(SHARE பண்ணுங்க)
News September 8, 2025
கோவை அருகே விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

புளியம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் மயில்சாமி, தினேஷ் ஆகியோர் நேற்று டூவீலரில் கோவை எம்.கவுண்டம்பாளையம் அருகே வேகமாக சென்றுள்ளனர். அப்போது, வளைவில் திரும்பும் போது எதிரே வந்த டூவீலர், பின்னால் வந்த கார் மீது மோதியது. இதில் டூவீலர்களில் வந்த கருப்புசாமி, மயில்சாமி, தினேஷ் மூவரும் படுகாயமடைந்தனர். மயில்சாமி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.