News September 6, 2025

பெரிய படங்கள் மீது குறிவைத்து தாக்குதல்: தயாரிப்பாளர்

image

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் வந்தால், திட்டமிட்டு நெகட்டிவ் தகவல்களை பரப்புவதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் வேதனை தெரிவித்துள்ளார். சினிமாவை மிஸ்யூஸ் செய்யாமல், நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக ஜிவியை நெருங்குவது கடினம், ஆனால் நடிகராக அவரை அணுகுவது எளிது, சம்பளம் வாங்காமல் கூட நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

மிஷ்கினால் கண்கலங்கிய பெற்றோர்

image

மாணவியின் கல்விச் செலவை ஏற்ற இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மிஷ்கின், அதில் போட்டியாளரான திஷாதனாவின் நான்கரை ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். மேலும் திஷாதனாவிடம் அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும் தானே மாஸ்டர்ஸ் படிப்பதற்கான பணத்தை கட்டுவதாகவும் உறுதியளித்தார். இதை கேட்ட திஷாதனாவின் பெற்றோர்கள் கண் கலங்கினர்.

News September 8, 2025

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

News September 8, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

image

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!