News September 6, 2025
குமரி: முக்கிய கோவிலில் நேர மாற்றம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 8, 2025
குமரியில் நகை திருடிய பெண்கள் கைது

தம்மத்துக்கோணம் Dr.பகவத்தின் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லாததால், இவரை உண்ணாமலைகடை சுசீலா பராமரித்து வந்தார். செப்.6 ஆம் தேதி சுசீலா வீட்டுக்கு சென்ற பின்பு Dr. மாமியாரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. சுசீலா நகையை திருடியிருப்பார் என்ற சந்தேகத்தில் அளித்த புகாரின்படி ராஜாக்கமங்கலம் போலீசார் சுசீலா, நகையை மறைத்து வைத்திருந்த அவரது தங்கை சாந்தியை கைது செய்து நகையை மீட்டனர்.
News September 8, 2025
குமரி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள் <
News September 8, 2025
குமரி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

குமரி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் <