News April 10, 2024
சுரண்டல், ஊழலின் மற்றொரு பெயர் திமுக!

கோவையில் மின் கட்டண உயர்வால், ஜவுளித்தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் எல்.முருகன், அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் மாநிலங்கள் வளர வேண்டுமென்பதே பாஜகவின் நோக்கம். திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. சுரண்டல், ஊழலின் மற்றொரு பெயர் திமுக” என்றார்.
Similar News
News March 11, 2026
வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?
News March 11, 2026
இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.
News March 11, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


