News September 6, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர்

image

திருப்புவனத்தில் நலம் காக்கும ஸ்டாலின் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார். சிவகங்கை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர். ஏராளமான கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பயன் பெற்றனர்.

Similar News

News September 8, 2025

காரைக்குடி வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

image

காரைக்குடி வழியாக ( வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு )எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் ( 06061 ) வரும் 10 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்தும் , வண்டி எண் ( 06062 ) 11 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தும் புறப்படும் இந்த இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் காரைக்குடி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 8, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக் செய்யவும்<<>>. இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

BREAKING: சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள்/ கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!