News September 6, 2025
வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தினரை கௌரவித்த எஸ்பி

காவலர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தாரை கௌரவிக்கும் விதமாக, கடந்த 1993ஆம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தில்லை கோவிந்தன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் குடும்பத்தாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்து குழந்தைக்கு பரிசு வழங்கி நலம் விசாரித்து கௌரவிக்கப்பட்டது.
Similar News
News September 7, 2025
அண்ணாநகர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
News September 7, 2025
கடலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

கடலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 7, 2025
கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.