News September 6, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

image

நாகை மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

நாகை: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

நாகை மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

நாகை: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

image

நாகை மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 7, 2025

பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

image

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பிய பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்குப் பால் உற்பத்தியளார்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் மருதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!