News September 6, 2025

விஜய் பேச அனுமதி மறுப்பு?

image

செப்.13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை செய்ய உள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி கோரிய நிலையில், விஜய் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கவுரைக்காக திருச்சியில் தவெக தரப்பில் கேட்கப்பட்ட இடங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லையாம்.

Similar News

News April 2, 2026

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா அண்ணாமலை?

image

தேர்தலில் போட்டியில்லை, ஆலோசனைக் கூட்டங்கள் புறக்கணிப்பு என அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜகவினர் அதிர்ச்சியில் உள்ளதாக பேச்சு எழுந்தது. அவரை சமாதானம் செய்ய பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் பிரசார களத்தில் அண்ணாமலையை இறக்க அதிமுக விரும்புகிறதாம். அக்கட்சியின் வேட்பாளர்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம் ஆகியோர் அண்ணாமலையை நேரில் சந்தித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

News April 2, 2026

ஒரு சிகரெட்.. வாழ்க்கையில் 19.5 நிமிடங்கள் காலி!

image

ஒருவர் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் அவரது வாழ்நாளில் 19.5 நிமிடங்களை குறைப்பதாக லண்டன் யூனிவர்சிட்டி காலேஜ் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஒரு சிகரெட்டால் பெண்களுக்கு 22 நிமிடங்களும், ஆண்களுக்கு 17.5 நிமிடங்களும் ஆயுள் குறைகிறதாம். அப்படியெனில் ஆண்டுக்கணக்கில் பிடிக்கும் சிகரெட்களால் எவ்வளவு ஆயுள் குறையும் எனக் கணக்கிட்டுப் பாருங்கள். இது போதாதென்று சிகரெட்டால் 27 வகையான கேன்சர் ஆபத்தும் உள்ளதாம்.

News April 2, 2026

போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ஈரான் உறுதியளித்துள்ளது. நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது. போர் காரணமாக 19 எண்ணெய்க் கப்பல்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் அங்கு சிக்கியுள்ளனர். மத்திய அரசின் ராஜாங்க ரீதியான நடவடிக்கையால் சில கப்பல்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளன.

error: Content is protected !!