News September 6, 2025
அன்றாடம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள்

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT
Similar News
News September 7, 2025
Health: PCOD, PCOS பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு!

90% பெண்களுக்கு PCOD, PCOS போன்ற மாதவிடாய் பிரச்னைகள் இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய, கைவைத்தியம் இருக்கிறது. கருப்பட்டி, பெருங்காயம், பூண்டை ஒன்றாக இடித்து, அதை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சாப்பிட வேண்டும். 1 மாதத்திற்கு காலையில் சாப்பிட்டு வர PCOS சரியாகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதோடு உடற்பயிற்சி செய்வதும், சத்தான உணவுகளை உட்கொள்வதும் அவசியமாகும். SHARE IT.
News September 7, 2025
மகாநடிகன் மம்மூட்டிக்கு இன்று பிறந்தநாள்!

தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் மம்மூட்டிக்கு இன்று 74-வது பிறந்தநாள். ‘தளபதி’ படத்தில் தேவா, ‘ஆனந்தம்’ படத்தில் திருப்பதி கேரக்டரை வேறு யாரும் அந்த அளவிற்கு கச்சிதமாக செய்திருக்க மாட்டார்கள். 54 வருட திரை வாழ்க்கையில், 437 படங்களில் நடித்துள்ள மம்மூட்டி, 3 தேசிய விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 1 SIIMA விருதையும் வென்றுள்ளார். உங்களுக்கு பிடித்த மம்மூட்டி படம் எது?
News September 7, 2025
அதிரடி நீக்கம்.. இபிஎஸ்-ன் புதிய திட்டம்

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரம் என எதிர் அணியினர் சாடினாலும், ஜெயலலிதா மாதிரி தைரியமான முடிவு என EPS-ன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். BJP சார்பில் அழுத்தம் கொடுத்தாலும் மீண்டும் ஒன்றிணைப்பு இல்லை என உறுதியாக உள்ளாராம். பொதுச்செயலாளர் வழக்கில் MHC சாதகமான தீர்ப்பு, BJP ஓவராக அழுத்தம் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு TVK-வுடன் கூட்டணி வைக்கலாமா எனவும் ஆலோசித்ததாக பேசப்படுகிறது.