News September 6, 2025
சேலம்: மின் துறையில் சூப்பர்வைசர் வேலை!

சேலம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
Similar News
News September 7, 2025
சேலம் செப்டம்பர் 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

செப்டம்பர் 7 சேலத்தில் – இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 9 மணி: கோட்டை மைதானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் ▶️காலை 10 மணி: டி.எஸ்.ஆர். மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா ▶️சுனில் மைத்ரா அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு ▶️ மாலை 3 மணி: ராசி மண்டபத்தில் பாஜக சார்பில் கூட்டம் ▶️மாலை 4 மணி: ஜி.வி.என். மண்டபத்தில் அனைத்து சமூகப் பேரமைப்புக் கூட்டம்.
News September 7, 2025
பஸ் ஓட்டுனர் தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு!

சேலம்; ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சக்திவேல் என்பவரை சதீஷ்குமார், ராஜ்குமார், பரமசிவம், மற்றும் தங்கதுரை ஆகிய நான்கு பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆத்தூர் நகர போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News September 7, 2025
செப்.10 முதல் சேலத்தில் இலவசம்!

சேலத்தில் ராகி, கம்பு, திணை, கருப்பு உழுந்து போன்ற சிறுதானியம் பயன்படுத்தி லட்டு, சத்து மாவு, முறுக்கு, அதிரசம், கேக்,பிஸ்கட் தயாரித்தல் பயிற்சி வரும் செப்.10 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது என சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பயிற்சி முடித்த பின் தொழில் தொடங்க சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 83008-52717 எண்ணை அழைக்கலாம்.