News September 6, 2025
5 ஆண்டுகளில் இந்த வேலைகள் இருக்காது: Anthropic CEO

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பல்வேறு துறைகளில் தொடக்க நிலை வேலைகளை AI காலி செய்துவிடும் என Anthropic CEO Dario Amodei கணித்துள்ளார். இப்போதே, பல நிறுவனங்கள் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி வெளிப்படையாக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மைக்ரோசாஃப்ட், Nvidia நிறுவன அதிகாரிகள், Dario -வின் கருத்துகளை மறுத்து, AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
Similar News
News September 7, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*மன துன்பங்களுக்கு ஒரே மருந்து உடல் வலி.
*மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை.
*எல்லா செல்வங்களுக்கும் மூலமாய் இருப்பது உழைப்பு.
*கயிற்றை நமக்கு விற்றவன்தான் நாம் தூக்கிலிடும் கடைசி முதலாளியாக இருப்பான்.
*பயனுள்ள பொருட்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது பயனற்ற நபர்களை அதிகளவில் உருவாக்குகிறது. *ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.
News September 7, 2025
உலகக்கோப்பை: மாஸ் என்ட்ரி கொடுத்த மொராக்கோ

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, முதல் ஆப்பிரிக்க நாட்டு அணியாக மொராக்கோ கால்பந்து அணி தேர்வாகியுள்ளது. நைஜருக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடருக்குள் நுழைந்துள்ளது. PSG நட்சத்திர வீரர் ஹகிமி இடம்பெற்றுள்ள இந்த அணியானது, 29, 38, 51, 69, 84-வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.
News September 7, 2025
₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.