News September 6, 2025
ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்தச் சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. தெருநாய்களால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 8, 2025
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
தி.மலையில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி!

தி.மலை மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டி வருகிற 9-ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி 10-ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.