News September 6, 2025
சோளிங்கர்: சந்திர கிரகணம் – கோவில் நடை சாற்றப்படும்

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 அன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்
Similar News
News September 7, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News September 6, 2025
தாட்கோ: போர்க் லிப்ட் பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
ராணிப்பேட்டை: 108 ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான நேர்காணல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.6) 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றத் தேவையான பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவ சேவைகளை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.