News September 6, 2025
அம்பேத்கரின் நினைவுகளால் நெகிழ்ந்த ஸ்டாலின்

லண்டனில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்தை CM ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தந்தை பெரியாருடன் அம்பேத்கர் உரையாடும் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்ததாகவும் CM பதிவிட்டுள்ளார். சாதியால் ஒடுக்கப்பட்ட அம்பேத்கரின் வாழ்க்கை மாறிய இடத்தை பார்க்க பெருமையாக இருப்பதாகவும், தன்னை இது மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் CM செவ்வணக்கம் செலுத்தினார்.
Similar News
News September 7, 2025
US OPEN: இறுதிப்போட்டியில் நம்.1 VS நம்.2

நாளை (ஞாயிறு) மாலை நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் சிங்கிள்ஸ் பைனலில் ஜாக் சின்னர் – கார்ல் அல்காரஸ் மோதுகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் செமி பைனலில் நம்.2 வீரரான அல்காரஸ், ஜோகோவிச்சை வென்றார். இன்று நடந்த மற்றொரு செமி பைனலில் நம்.1 வீரர் ஜானிக் சின்னர், ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்மியை வென்றார். இருபெரும் வீரர்கள் மோதும் ஃபைனலில் ஆட்டம் அனல் பறக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
News September 7, 2025
ராசி பலன்கள் (07.09.2025)

➤ மேஷம் – இன்பம் ➤ ரிஷபம் – சுகம் ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – போட்டி ➤ கன்னி – உதவி ➤ துலாம் – லாபம் ➤ விருச்சிகம் – நற்செயல் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – அச்சம் ➤ கும்பம் – ஏமாற்றம் ➤ மீனம் – கவலை.
News September 7, 2025
ஆண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

ஆண்களிடம் எப்போதும் கேட்கக் கூடாத கேள்விகள்:
*இத்தன வருசமா வெளியூர்ல இருந்தும், இவ்வளவு தான் சம்பாதிச்சியா?
*திருமணத்தை தள்ளி வைக்கும் ஆணிடம், ‘முடி கொட்டிருச்சு. இன்னும் கல்யாணம் ஆகலையா?’
*வேலைத் தேடும் ஆணிடம், ‘நீ எப்போ வேலைக்கு போவ?’
*இன்னும் சொந்த வீடு வாங்கலையா?
*கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லையா?
வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.