News September 6, 2025
CM வெளிநாட்டு பயணம் அரசியல் நாடகம்: தமிழிசை

வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள நன்மை என்னவென்று இதுவரை CM ஸ்டாலின் வெளிப்படையாக சொல்லவில்லை என தமிழிசை சாடியுள்ளார். ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் என்பது வெற்று அரசியல் நாடகம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு அது உட்கட்சி விவகாரம் என்றும் திமுகவை எதிர்க்க வலிமையான கூட்டணி அமைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 6, 2025
டிடிவி தினகரன், OPS உடன் சமரசம் பேச தயார்: நயினார்

கூட்டணியில் மீண்டும் இணைவது குறித்து டிடிவி தினகரன், OPS உடன் சமரசம் பேச தயார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டதாக டிடிவி கூறியதற்கு பதிலளித்த அவர், அமித்ஷா முன்னிலையில் EPS-ஐ முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதற்கு டிடிவி என்ன விளக்கம் அளிப்பார் என வினவினார். கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியதற்கு, தான் பொறுப்பாக முடியாது என்றும் நயினார் கூறினார்.
News September 6, 2025
BCCI-ன் அடுத்த தலைவர் யார்? 28-ம் தேதி தேர்தல்

வரும் 28-ம் தேதி மும்பையில் BCCI-ன் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் BCCI-ன் புதிய தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தேதியில் தான் ஆசிய கோப்பையின் இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. ஒருவேளை, இந்தியா ஃபைனலுக்கு நுழைந்தால், BCCI சார்பில் யாரும் அந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்.
News September 6, 2025
விலை மளமளவென குறைகிறது.. HAPPY NEWS

GST 2.0 எதிரொலியாக ரெனால்ட் இந்தியா நிறுவனம், தங்களது கார்களின் விலையை ₹96,395 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, Kwid – ₹55,095, Triber – ₹80,195, Kiger – ₹96,395 வரை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் இக்குறைந்த விலையில் கார்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, <<17625735>>டாடா மோட்டார்ஸ்<<>> – ₹1.45 லட்சம், <<17630179>>மஹிந்திரா<<>> – ₹1.56 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்தது.