News September 6, 2025
ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமை தாங்கி, பங்கேற்ற அரசு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பினை பணியாளர்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டரில் பிரச்னையா?

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.


