News September 6, 2025
BRAKING: கோவை அதிமுகவில் புதிய திருப்பம்!

கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அமைப்பு செயலாளராக இருந்து வந்த செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்று முன்னர் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
கோவை TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில், ஒருநாள் காளான் வளர்ப்பு பயிற்சி, (08.09.2025) அன்று நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.590 ஆகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
மகளிருக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூக பணி மையம் இணைந்து பெண்களுக்கான இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு, அன்னை தெரசா தையல் பள்ளி, ரோசரி பள்ளி வளாகம், மேட்டுப்பாளையம், தொடர்புக்கு: 99761 – 80670, 77388 – 50094 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
News September 6, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.