News September 6, 2025

GST மாற்றத்தால் 3,700 இழப்பு: SBI கணக்கீடு

image

GST சீர்திருத்ததால் ஆண்டுதோறும் ₹48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், அரசுக்கு ₹3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என SBI மதிப்பிட்டுள்ளது. இந்த மாற்றங்களால் நுகர்வு அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் கூறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வரி குறைப்பது, சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News September 6, 2025

பெரிய படங்கள் மீது குறிவைத்து தாக்குதல்: தயாரிப்பாளர்

image

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் வந்தால், திட்டமிட்டு நெகட்டிவ் தகவல்களை பரப்புவதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் வேதனை தெரிவித்துள்ளார். சினிமாவை மிஸ்யூஸ் செய்யாமல், நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக ஜிவியை நெருங்குவது கடினம், ஆனால் நடிகராக அவரை அணுகுவது எளிது, சம்பளம் வாங்காமல் கூட நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

கழுத்து வலி பிரச்னையா? இது காரணமாக இருக்கலாம்!

image

தினமும் காலை எழுந்து கொள்ளும்போதே சிலர் கழுத்து வலியுடன் எழுவார்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணை முக்கிய காரணம். தலையணை சரியாக இல்லையெனில், கழுத்து, தோள்பட்டை வலி, உடல் சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து, தூக்கமின்மை பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது. இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை வரும். மெல்லிய, சுத்தமான தலையணையே பயன்படுத்துங்கள்.

News September 6, 2025

நீரவ் மோடி, மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் மும்முரம்

image

நிதி மோசடி குற்றவாளிகளை நாடு கடத்தும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அதிகாரிகள் குழு, சமீபத்தில் திஹார் சிறையில் ஆய்வு செய்தனர். நீரவ் மோடி, மல்லையா UK-க்கு தப்பியோடிய நிலையில், இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை நாடுகடத்துவதற்கு பிரிட்டன் கோர்ட் தயக்கம் காட்டியது. இந்நிலையில், சிறப்பு வசதி செய்து தருவதாக பிரிட்டன் குழுவிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது.

error: Content is protected !!