News September 6, 2025

மருத்துவக் கல்லூரி இயக்குனர் நியமனம்

image

நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி. இவர் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வராக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். தற்போது இவர் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தோல் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் பல்கலைக்கழக அளவில் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

Similar News

News September 6, 2025

குமரி: முக்கிய கோவிலில் நேர மாற்றம்

image

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

குமரி: கடலில் பகுதியில் சடலம் மீட்பு

image

ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரது உடல் கடலில் இறந்த நிலையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை மீட்டனர். இறந்து போன அந்த நபர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் இன்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News September 6, 2025

குமரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!