News September 6, 2025
கரூரில் சோழர் கால ஜேஷ்டாதேவி சிறப்பு கண்டுபிடிப்பு

கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டா தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் மாரியம்மன் கோயில் தென்புறத்தில், பழமை வாய்ந்த ஜேஷ்டாதேவி சிற்பம் இருப்பதாக, நிமித்தம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த தகவல்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் அர்ச்சுனன், உத்திராடம் ஆகியோர் சிற்பத்தை கண்டறிந்தனர்.
Similar News
News September 6, 2025
கரூர் தொகுதியில் ஸ்டாலின் முகாம்

கரூர் தொகுதியில் (12.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி, பரமத்தி, தான்தோன்றி மலை, தோகைமலை பகுதிகளில் வசிப்பவர்கள் இதில் பயன் பெறலாம். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற பல கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும். பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சேவைகளை பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
News September 6, 2025
கரூர்: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 6, 2025
கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.