News September 6, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

<<17629139>>செங்கோட்டையனை<<>> தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒ.செ.,(ஒன்றிய செயலாளர்) சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒ.செ., ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒ.செ., குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒ.செ., தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 25, 2026
ஸ்டாலினின் அரசியல் எடுபடாது: வானதி சீனிவாசன்

மேற்காசியப் போரால் உலகம் தவித்தாலும், பிரதமர் மோடியின் ராஜ தந்திரத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் வணிக சிலிண்டர் கட்டுப்பாடு பதுக்கலைத் தடுக்கவே அன்றி தட்டுப்பாட்டினால் அல்ல. கொரோனா காலத்தைப் போலவே எத்தகைய நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். தேர்தல் நேரத்தில் மக்களைப் பதற்றமடையச் செய்யும் முதல்வர் ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் என்றார்.
News March 25, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.
News March 25, 2026
சோனியா காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கங்காராம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மருத்துவமனையில் உள்ளனர். அவரது உடல்நிலை குறித்த நிலவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்குமுன் ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


